எதுவும் ஆகலாம் - சுகந்தீனா


மனம் என்ற ஒன்று
மதிப்பிற்குரியதாக
இருக்குமானால்
உலகில் அனைத்தும்
சாத்தியமே

நீ தாய்மை
அடையாமலேயே 
*தாயாகலாம்*

பெற்றோரின்றி
தவிக்கும்
*குழந்தைகளை*
*தாங்கிப்* 
பிடிக்கையில்

நீ மருத்துவர்
ஆகாமலேயே
*உயிர்களை*
*காப்பாற்றலாம்*

வாகனத்தில் 
நீ அவசரமாக
செல்லும் போதும்
*அவசர ஊர்திக்கு*
வழிவிட்டு
நிற்கையில்

நீ போதி 
மரத்தடியில்
அமராமலேயே 
*புத்தனாகலாம்*

தேவையற்ற 
இடத்தில் 
பேசுவதை நிறுத்தி
*மௌனம்* காக்கையில்

✍️கவிரசிகை...
       ...சுகந்தீனா