புகை நமக்குப் பகை - த.ஏமாவதி

அரிய பிறவியில் அழகாய்ப் பிறந்தாய்!
......அரும்பெரும் வரமாய் உடலைப் பெற்றாய்!

பெரிய செல்வமாய்ப் பழுதிலா உடம்பைப்
.......பெற்றாய் நீதான் பிறந்த போதில்!

விரியும் நலத்தை விரும்பியே காப்பாய்!
......விளங்கா போதை விரட்டி விடுவாய்!

திரியும் மனத்தைத் திருத்திக் கொள்வாய்!
......திரளும் நலத்தைத் தேக்கிக் கொள்வாய்!
(1)

புகையைக் குடித்துப் பகையைத் தேடும்
.......புல்லியர் வாழ்வு பாழாய்ப் போகும்!

புகையை விடுத்துப் பண்புடன் வாழ்ந்தால்
......புலரும் விடியல் பெறுவாய் நீயும்!

புகையால் சுவாசம் புண்ணாய்ப் போகும்!
......புவியின் காற்றும் பாழாய்ப் போகும்!

திகைக்க வைத்தே தீண்டும் புற்றும்
.......திடமாய் முடிவெடு துரத்திடு புகையை!
(2)

*த.ஏமாவதி*
*கோளூர்*