கைபொம்மைகள் - சுகந்தீனா

பொம்மைகளுக்கு
பொருந்தும் 
வாழ்க்கை
பெண்களுக்கும்
வாய்த்து விடுகிறது

உறவுகளுக்காய்
வேறு வழியின்றி
தலையாட்டுவதை
தவிர தனக்கென்று
வாழத் துணியாமல்
வாழ்வு முடிகிறது.

✍️ கவிதாயினி
     *சுகந்தீனா*