Ticker

6/recent/ticker-posts

*தினம் ஒரு குட்டிக்கதை-பால.ரமேஷ்

குயவன் 
ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். .

அங்கு 
ஏராளமான பானைகள், குடங்கள், 
சட்டிகள் அடுக்கப்
பட்டிருந்தன....

அவன் அருகில் 
ஓரு ஆடும் கட்டிப் போடப்
பட்டிருந்தது. 

அவ்வப்
போது அது 'மே..மே..' என்று கத்திக் கொண்டிருந்தது.....

வயதான 
மகான் ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். 

குயவன் பானை செய்வதைப் பார்த்த படியே தரையில் அமர்ந்தார்.......

வந்தவருக்கு 
ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். 

அதை வாங்கிக் குடித்த குரு, .... 

இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா ? என்று கேட்டார்.....

இல்லீங்க, 
சாமி. 
இது ஏதோ காட்டாடு. 

இந்தப் பக்கமாக வந்தது. 
பிடித்துக் கட்டிப் போட்டேன் ! என்றான் குயவன்.....

எதற்காக ? 
என்று கேட்டார் குரு.

பண்டிகை வரப்
போகிறதே ! இறைவனுக்கு 
பலி கொடுக்கலா
மென்றே தான்.... என இழுத்தான் குயவன்......

பலியா ?
குரு வியப்புடன் வினவினார்.....

ஆமாம், 
சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் 
பலி கொடுத்தால் ரொம்ப விசேஷம். 

தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாமே சுபீட்சமாக
இருக்கும்.".....

இதைக் கேட்ட 
குரு எழுந்தார். 

தன் கையிலிருந்த மண் குவளையை ஓங்கித் தரையில் அடித்தார். 

குவளை துண்டு துண்டாகச் சிதறியது.....

குயவன் 
திகைத்து நின்றான். 

துறவியை வெறித்துப் பார்த்தான்....

துறவி நிதானமாகத் 
கீழே குனிந்தார். 

சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்று விடாமல் பொறுக்கி அடுக்கினார். 

அதை 
குயவனிடம் நீட்டினார்...

என்ன சாமி இது ? என்றான் குயவன் கோபமாகவே.

உனக்குத் தான் பிடிக்குமே, 
அப்பா ?
என்றார் குரு...

என்ன உளறுகிறீர்கள் ? சாமி,
குயவனின் குரலில் உஷ்ணம் தெறித்தது. 

என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். 

இது வேறு
எனக்குப் பிடிக்கும் என்றும் சொல்கிறீர்கள். 

கேலியா ? 

கிண்டலா ? 

வேண்டும் 
என்றே என்னை
வம்புக்கு இழுக்கிறீர்களா ? 

அல்லது உங்களுக்குப் பித்தா ?
என்று ஆத்திரப்
பட்டான்......

அப்படி
யெல்லாம் எதுவுமே இல்லையப்பா. 

உண்மையான அன்புடன் 
தான் இதை செய்தேன், 

குரு சிறிதும் பதட்டப்
படாமலே சொன்னார்....

நான் செய்த அந்தப் பானையில்,
என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்
கிறதே ! 

அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன் ? 
சாமி,

இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது சாமி ?.....

நல்லது. ஆண்டவன் படைத்த, 
ஒரு உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது ? 

இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு வரம் தருவான்,
என்று நீ எப்படி எதை வைத்து நம்புகிறாய் ? 

எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் 
சகிப்பாள் ? 

எந்தத் தகப்பன் 
தன் குழந்தை கொல்லப்
படுவதை விரும்புவான் ? ... 

குருவிடமிருந்து அடுக்
கடுக்காகக் கேள்விகள் பிறந்தன......

குயவன் நிதானமாக, 
ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை ? 
உன்னிடம் 
என்ன உண்டு ? 
அவர் எதை கேட்கிறார் ? 
எதை நீ அளிப்பாய் ?.....

அவன் படைத்த உலகில்,
அவனால் 
படைத்த நீ, 
அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா ?

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். 
இதைச் 
செய்வேன் என்பதும், 
பதிலுக்கு 
அவன் அதைச் செய்வான், 
இதைச் 
செய்வான் என்பதும் 
வெறும் கபட வஞ்சனையே!......

தூய எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணரமுடியும். 

தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.

அன்பு மலர் 
எடுத்து அனு தினமும் பூசை செய்வாய்... 

எல்லா 
உயிரினங்
களிடமும் அன்பு செலுத்தி,
நெருங்கி வாழ்வதையே இறைவன் என்றும் விரும்புகிறார்....