முக கருமை மற்றும் கரும்புள்ளி போக்க சில எளிய வீட்டு வைத்தியம்

✍️கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.

✍️முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

✍️வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

✍️எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.