நீரிழிவு பாதிப்புள்ளோருக்கான சிறந்த உணவு



சோற்­று­டன் தட்­டைப்­ப­யறு அல்­லது காரா­ம­ணிக் குழம்­பைச் சேர்த்து உண்­ணு­வது நீரி­ழிவு பாதிப்­பு­டை­யோ­ருக்­குச் சிறந்த உண­வுத் தெரி­வாக இருக்­கும் என்று ஊட்­டச்­சத்து வல்­லு­நர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

சிறு­நீ­ரக வடி­வத்­தில் இருப்­ப­தால் ஆங்­கி­லத்­தில் ‘கிட்னி பீன்ஸ்’ என அழைக்­கப்­படும் தட்­டைப்­ப­யறு, குறைந்த கிளை­சீ­மிக் குறி­யீட்­டெண் (24) கொண்­டது. இத­னால், உண­வில் இருந்து இரத்­தத்­தில் சர்க்­கரை சேரும் வேகம் மிக­வும் குறை­வாக இருக்­கும். தட்­டைப்­ப­யற்­றில் உள்ள எளி­தில் கரை­யக்­கூ­டிய நார்ச்­சத்து­கள், கொழுப்­பின் அள­வைக் கட்­டுப்­ப­டுத்தி, இரத்­தத்­தில் சர்க்­கரை அள­வைக் குறைக்க உத­வு­கிறது. இதி­லுள்ள பொட்­டா­சி­யம், இரத்த அழுத்­தத்­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்கும்.

சோற்­று­டன் இத­னைச் சேர்த்து உண்­ணும்­பொ­ழுது, அவற்றில் உள்ள புர­தத்­தில் இருந்து சில இன்­றி­ய­மை­யாத அமினோ அமி­லங்­கள் கிடைக்­கின்­றன.

உடல் எடை அதி­க­ரிப்பு, நீரி­ழிவு ஏற்­பட முக்­கி­ய­மா­ன­தொரு கார­ணம். தட்­டைப்­ப­யற்றை உண­வில் சேர்த்­துக்­கொள்­வது உடல் எடை­யைக் குறைக்க உத­வும். இதி­லுள்ள புர­தத்­தாலும் நார்ச்­சத்­தா­லும் நீண்ட நேரத்­திற்கு வயிறு நிரம்­பி­ய­து­போல் இருக்­கும். அத்­து­டன், இது சீராக ஆற்­றலை வழங்­கு­வ­தால் உடல் எடை கட்­டுக்­குள் இருக்­கும்.

தட்­டைப்­ப­யற்­றில் பல தாதுப்­பொ­ருள்­களும் உயிர்ச்­சத்­து­களும் இருப்­ப­தால் இயற்­கை­யாக நோயெ­திர்ப்­பாற்­ற­லைக் கூட்­டும் எனக் கருதப்­படு­கிறது.