ஸ்வீட் கார்னை வைத்து சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த 5 அசத்தலான ரெசிப்பிக்கள்





1. கார்ன் பேல்:

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - 1 கப்
மிக்சர் செவ் - ¼ கப்
பொரி - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சாட் மசாலா - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப


செய்முறை:

1 கப் சோளத்தை மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சோளத்தைச் சேர்த்து, அத்துடன் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது 2 டீஸ்பூன் புதினா சட்னி, 2 டீஸ்பூன் புளி சட்னி, செவ், பொரி, சாட் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான கார்ன் பேல் ரெடி.

2. கார்ன் சாண்ட்விச்:

தேவையான பொருட்கள்:

வேகவைத்த கார்ன் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய குடமிளகாய் - 1/2கப்
கொத்தமல்லி இலைகள் - 2 டீஸ்பூன்
சீஸ் - 2 கட்டிகள்
மிளகுதூள் - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சோளத்துடன் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், துருவிய சீஸ், மிளகு தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பிரெட் துண்டின் மீது 1 டீஸ்பூன் புதினா சட்னியை பரப்பவும். அதன் மீது கலந்து வைத்துள்ள சோளத்தை பரப்பவும். இப்போது மற்றொரு பிரெட் துண்டை எடுத்து அதன் மீது 1 டீஸ்பூன் புதினா சட்னியை பரப்பவும். இந்த ரொட்டி துண்டுடன் சாண்ட்விச்சை மூடி வைக்கவும். இப்போது சாண்ட்விச்சை சிறிது வெண்ணெய் பயன்படுத்தி நான்-ஸ்டிக் தவாவில் டோஸ்ட் செய்யவும் அல்லது சாண்ட்விச் மேக்கரைப் பயன்படுத்தி கிரில் செய்யவும்.

3. நெருப்பில் வாட்டிய சோளம்:

நெருப்பில் வாட்டிய நம் எல்லோரையும் நம் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. எனவே மழைக்கால தின்பண்டமான சோளத்தை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.

 

சருகுகளால் மூடப்பட்டுள்ள முழு சோளத்தை, நேரடியாக தீயில் வைத்து, கருப்பு திட்டுகள் தோன்றும் வரை அனைத்து பக்கங்களிலும் நன்றாக நெருப்பில் வேகும் வரை வாட்டி எடுக்கவும். இது சோளம் கருகிப்போகாமல் உள்ளே பாதுகாப்பாக வைத்து சமைக்க உதவுகிறது. இப்போது சோளத்தை சுற்றியுள்ள சருகுகளை முழுமையாக அகற்றவும். மீண்டும் முழு சோளத்தையும் தீயில் வைத்து, எல்லா பக்கங்களிலும் இருந்து கிரில் செய்ய வும். பழுப்பு-கருப்பு திட்டுகள் சமமாக தோன்றினால், உங்களுடைய வறுத்த சோளம் தயார். இப்போது சோளம் மீது எலுமிச்சையை தேய்த்து, அதன் மீது உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலாவை தூவி, ருசியான ஸ்நாக்ஸை அனுபவித்து சாப்பிடலாம்.

4. பொறித்த காரன்:

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சோளம் - 1 கப்
சோள மாவு - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - ¼ தேக்கரண்டி
சாட் மசாலா -¼ தேக்கரண்டி
சீரக தூள் - ¼ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி

 

செய்முறை:

சோளத்தை கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 முதல் 6 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் நன்றாக தண்ணீரை வடித்து, பேப்பர் டவலில் பரப்பி காயவைத்துக் கொள்ளவும். இப்போது சோளத்துடன் 2 டீஸ்பூன் சோள மாவு, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, சீரக தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறவும்.

5. கார்ன் பஜ்ஜி:

வேகவைத்து, மசித்த சோளம் - 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழக்கு - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 2
கொத்தமல்லி இலைகள் - 2 டீஸ்பூன்
துருவிய பிரெட் - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
துருவிய சீஸ் - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

வேகவைத்து மசித்த சோளம் மற்றும் உருளைக்கிழங்குடன் நறுக்கிய வெங்காயம், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா, கரம் மசாலா, துருவிய சீஸ், உப்பு, கொத்தமல்லி இலைகள், பிரெட் கிரம்ஸ், சோள மாவு ஆகியவற்றைக் கலந்து கொள்ளலாம். இதனை வடையை போல் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, தவாவில் உள்ள லேசான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இத்துடன் காரமான சட்னியைக் கொண்டு பரிமாறவும்.