காலை வெறும் வயிற்றில் பழைய சோறு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?




அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடத்தில் உள்ளது என்று கூறப்படுகின்றது.


அதனால் தான் காலங்காலமாக இதனை நமது பெரியோர்கள் உண்டு வருகின்றனர்.

பழைய சாதம் மற்றும் அதை ஊற வைத்த நீராகாரத்தில் (புளிச்ச தண்ணீர்) இருந்து வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரிசி உணவுகளை விட அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

பழைய சோறில் வேறெந்த உணவுப் பொருட்களிலும் கிடைக்காத வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.

அந்தவகையில் பழைசோறு எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

நொதிக்க வைககப்பட்ட பழைய சாதத்தில் அதிகப்படியான அளவு வைட்டமின் டி உருவாகிறது. இது அதிகப்படியான உடல் சோர்வை தீர்க்க உதவுகிறது. அதோடு வயிற்றில் அமிலத் தன்மையும் வாயுவும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதோடு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கச் செய்கிறது.

பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது.

பழைய சாதமும் அதில் நொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரிலும் அதிக அளவிலான பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நொதிக்க வைக்கப்பட்ட பழைய சாதத்தில் இருந்து நாம் அதிகப்படியான செலீனியம் மற்றும் மக்னீசியத்தையும் பெற முடியும். இவை இரண்டுமே நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகின்றன.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, வயிறை லேசாக வைத்திருப்பது போல உணர வைக்கிறது. இதனால் உடல் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

பழைய சாதம் மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இருப்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.

பழைய சாதத்தில் இருந்து வடிகட்டிய நீர் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷ்னராக செயல்படுகிறது. தலைக்கு ஷாம்பு பய்னபடுத்தி தலையை அலசிய பின்னர் இந்த நொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி தலையை அலசினால் தலைமுடி உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறும்.