உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு இட்லி



கொள்ளு இட்லி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு பருப்பை சேர்த்து கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

*தேவையானப் பொருட்கள்:-*

கொள்ளு பருப்பு - 3 கப்

இட்லி அரிசி - 5 கப்

உப்பு - தேவையான அளவு

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

*செய்முறை:-*

முதலில் கொள்ளு பருப்பு மற்றும் இட்லி அரிசியை தனித்தனியாக 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொள்ளு பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசியினை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொள்ளு மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு, சிறிதளவு சோடா உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மாவை இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கொள்ளு இட்லி தயார்