தங்கம் விலை புதிய உச்சம்- வரலாறு காணாத விலை உயர்வு




சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.5,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.74.40க்கும் கிலோ வெள்ளி ரூ.74,400க்கும் விற்பனையாகிறது.