நறுவலி பழத்தின் இவ்வளவு பயன்களா?



இது நாம் கேள்விப்படாத ஒரு பழப் பெயராக இருக்கும். 1990 க்கு முன் பிறந்தவர்களுக்கு இந்த பழம் பற்றி தெரியும்.

மூக்கு சளிப்பழம் என்று கிராமப் புறங்களில் அழைப்பார்கள்.சுண்டைக்காய் போன்று கொத்துக்கொத்தாக காய்த்துக் குலுங்கும் இந்த நறுவலி பழம் மரத்தில் காய்க்க கூடியது. இந்த மரம் பெரும்பாலும் ஆறு,குளம், ஏறி ஆகியவற்றில் ஓரங்களில் தானாகவே வளரும். சமவெளிப்பகுதிகளிலும் இந்த மரம் காணப்படுகிறது.

இதன் சுவை இனிப்புடன் கூடிய துவர்ப்பு சுவையாகும். வாயில் வைத்து சுவைத்தால் பசை போன்று பிசுபிசுப்பாக இருக்கும். இதனால்தான் இதனை கிராம மக்கள் மூக்கு சளிப்பழம் என்று அழைக்கிறார்கள்.

இந்தப்பழத்தை சாப்பிடுவதால் மூலநோய் முழுமையாக குணமாகும்.

உடல் சூடு முழுமையாக குறையும்.

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கம் சரியாகும்.

இதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை நீர்த்துப்போன விந்துவை கெட்டியாக்கும். மூட்டுகளில் உள்ள திரவத்தை புதுப்பித்து மூட்டுவலி இல்லாமல் ஆக்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

நுரையீரலில் உள்ள சளியை வெளியாக்கும்.இதயத்தை பலப்படுத்தும்.

குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளை மலத்துடன் சேர்த்து வெளியாக்கும் ஆற்றல் இந்த மூக்கு சளிப்பழத்திற்கு உண்டு.

மலம் இருகிப்போவதை தடுத்து இலகுவாக மலம் கழிக்க துணை புரியும்.

இந்தப்பழத்தை 20 பழத்திற்கு மேல் சாப்பிடுவது இயலாத காரியம். எனவே இந்தப்பழம் கிடைத்தால் தினமும் 10 பழம் சாப்பிட்டாலே போதும்.நிறைய நன்மைகளை அடைந்து கொள்ளலாம்.

இதன் குடும்பப்பெயர் போராசினிசு (Boraginaceae) என்பதாகும். இதன் பூர்வீகம் இந்தோ-மலேசியா பகுதியாக இருந்தாலும் வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் மெலனீசியா போன்ற பகுதிகளிலும் பரவிக்காணப்படுகிறது. இது தாய்லாந்தில் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் வழக்கில் இதன் பழம் மூக்குச்சளிப்பழம் எனப்படும்