பற்களைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்



வாய் துர்நாற்றம் நீங்க:

இரவிலும் காலையிலும் வாய் கொப்பளித்து தூங்கச் செல்வது நல்லது.


ஓமத்திரவத்தினை நீருடன் கலந்து கொப்பளிக்கலாம்.

கருவேப்பிலையை பொடியாக்கி மோருடன் கலந்து கொப்பளிக்கலாம்(அ) உள்ளுக்கும் அருந்தலாம்.

பச்சை புதினா கீரையினை மென்று நீரில் கொப்பளிக்கலாம்.

எலுமிச்சம் பழசாறு உப்புடன் சேர்த்து கொப்பளித்தல் நலம்.தினம் காலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணை 10 மில்லி வாயில் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் கொப்பளித்து துப்பி வர பல் சம்பந்தமான அனைத்து நோய்களும் அகலும்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள்.

வாய் துர் நாற்றம் உடையவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிறில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பற்கறை போக்க:-

இரவிலும் காலையிலும் நறுக்கிய வெங்காயத்தால் பற்களை தேய்த்து வந்தால் கறை நீங்கும்.

எலுமிச்சை பழத் தோலுடன் உப்பு சேர்த்து வாரம் இரு முறை தேய்த்து வந்தால் கறைகள் நீங்கும்.

அரை கப் பேக்கிங் சோடாவுடன், இரண்டு டீஸ்பூன் உப்பு கலந்து கொள்ளுங்கள். கை அல்லது பிரெஷ்ஷில் இந்தப் பொடியைத் தொட்டு பல் துலக்குங்கள். பற்களின் கறையை நீக்குவதோடு வாய்ப்புண் வராமலும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

உமரிக்காயை தூள் செய்து சிறிது உப்புத் தூள் கலந்து பற்களை தேய்த்து வந்தால் பற்களில் கறை நீங்கும். கறை மாறிப் போனதும் இப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

கருவேலம்பட்டை பவுடர் பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

வெங்காய சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும். இம்மாதிரி வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறைபடியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.

பல் ஈறு வீக்கம் குறைய:-

கடுக்காய் பொடியுடன் படிகாரம் சேர்த்து வாய்கொப்பளித்து வர ஈறு வீக்கமும் புண்ணும் குறையும்.

பல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும். இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட, ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.

பல் உறுதிக்கு:

ஆலம் விழிதினை சுத்தம் செய்து துண்டுகளாக்கி பொடித்து படிகாரத்துடன் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்கள் உறுதிப்படும்.