நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை சாப்பிட்டால் போதும்



முதல் நாள் இரவு மீந்த சாதத்தில் நீரூற்றி வைத்தால்
மறு நாள் காலை பழையது
ரெடி..

இதோட அருமை அமெரிக்கா காரனுக்கு தெரியுது.. நமக்கு தெரிஞ்சும் நாம சாப்பிடறதில்ல..

இப்போ அங்க இத தயாரிச்சு
பேக் பண்ணி விக்கறாங்க..

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது..
"தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......

அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்..

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்

"HOW to MAKE PALAYA SORU?...
என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை உண்டால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம்...

அது பெரிய தவறு…!!

சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிடலாம்.

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்..