மயக்கம் ஏன் வருகிறது தெரியுமா?

மயக்கம் ஏன் வருகிறது..

நமது உடல் சமநிலையில் இல்லாவிடில் மயக்கம் உண்டாகும். இந்த சமநிலை உணர்வை மூளைக்கு உணர்த்துவது காதுகளின் உள்ளேயுள்ள வெஸ்ட்டிபுல்லார் லேபிரின்த் (Vestibular Labyrinth) என்ற உறுப்பு.

நமது சுற்றுச் சூழலைப் பற்றிய தகவல்கள் இதன் மூலமே மூளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. உடலின் தொடு உணர்ச்சியையும், மூட்டுகளின் செயல்பாட்டையும் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்பவை சோமோட்டோசென்சரி ஆஃப்பரன்ட்ஸ் (Somatosensory Afferents) என்ற நரம்புகள். இவை முதுகுத் தண்டு நரம்புகள் (Spinal Cord) வழியாக மூளைக்கு செல்கின்றன.

இத்தகைய வெளி உணர்வுகள் மூளையில் உள்ள வெஸ்ட்டிபுளார் நியூக்ளியஸ் (Vestibular Neucleus) என்ற பகுதியை வந்தடைகின்றன. இது சிறு மூளை, எக்ஸ்‌ட்ரா பிரமிடல் சிஸ்டம் (Extra Pyramidal System) என்ற மூளைப் பகுதியுடன் தொடர்புடையவை. இங்கிருந்து உள் உணர்வுகள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் , கழுத்து, கால்கள் பகுதிகளுக்கும் நரம்புகள் வழியாகச் செய்திகள் அனுப்புகின்றன.

இவ்வாறு வெஸ்ட்டிபுளார் சிஸ்டம் என்ற அமைப்பு இரண்டு வகையான செயல்களில் ஈடுபடுகிறது. அவை:

தலையை அசைக்கும்போதும் , திருப்பும்போதும் , பார்வையை அதற்கு ஏற்ப சம நிலைக்கு கொண்டு வருகிறது. உதாரணமாக நடந்துகொண்டே படிக்க முடிகிறது.

 உடல் அசைவின்போது கீழே விழுந்து விடாமல் சம நிலையில் இருக்க உதவுகிறது. இத்தகைய மிகச் சிக்கலான அமைப்பில் எங்கேயாவது குறைபாடு உண்டானால் சம நிலை பாதிப்புக்கு உள்ளாகி தலை சுற்றலும் மயக்கமும் ஏற்படுகிறது.

சில உதாரணங்கள் வருமாறு

வயதானவர்களுக்கு பார்வை குறைவு காரணமாக உண்டாகும் மயக்கம் .

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிப்பு காரணமாக உண்டாகும் மயக்கம் .

தலை, காது பகுதியில் அடி பட்டால் உண்டாகும் மயக்கம்.

மயக்கம் வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் கூறலாம்..

காது தொடர்புடையது (Otological)
மூளை தொடபுடையது (Neurological)
 பொது மருத்துவ காரணங்கள் (General Medical )

1. காது தொடர்புடையவை – நடுக் காது பிரச்சனை

காயம் (Trauma)
நீர்க் கசிவு (Discharge)
கட்டிகள் (Tumours)
 சுற்றுவட்ட வெஸ்ட்டிபுலார் குறைபாடு – லேபிரந்த் (Labyrinth) * வீக்கம் / காயம்.
இரத்தக் குறைவு.

மூளையைச் சுற்றியுள்ள திரை வீக்கம் Benign Paroxysmal Positional Vertigo – இந்த வகையான தலை சுற்றுதல் வெர்ட்டைகோ என்பது பலருக்கு உண்டாவதாகும். இது ஏற்பட சில காரணங்கள்:

தலையில் அடிபடுதல்.
இரத்த ஓட்டத்தில் தடை.
வைரஸ் கிருமிகள் தொற்று.
ஒற்றைத் தலைவலி.
Meniere’s syndrome எனும் தலை சுற்றும் குறைபாடு.

2 . மூளை தொடர்புடைய காரணங்கள்

நரம்பு கட்டிகள்
 மூளைக் கட்டி
 வலிப்பு நோய், ஒற்றைத் தலைவலி
 மது , மருந்துகள்
 Multiple Sclerosis எனும் நோய்

3. பொது மருத்துவக் காரணங்கள்

குறைவான இரத்த அழுத்தம்
நீரிழிவு நோய்
காதுகளில் இரைச்சல்
இரத்த சோகை
 இருதய வீக்கம்
 இருதய வால்வு நோய்கள்
இருதயத்திலிருந்து குறைவான * இரத்த வெளியேற்றம்
 குறைந்த இனிப்பு
 தொடர்ந்த களைப்பு
 இதர நோய்கள்

ஆக..! மயக்கம் உண்டாவது இவ்வளவு சிக்கல் இருப்பதால் சரியான காரணமறிந்து மருத்துவத்தை கடைபிடிக்கும் போது தீர்வு கிடைக்கும்.