அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு...? பழமொழியின் உண்மையான பொருள் தெரியுமா?


அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு...?

அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை
என்றுதானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?

உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது.

பழமொழியின் உண்மையான அர்த்தம்:

அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.

இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.

அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும்.

அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது
ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும்.

அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள
பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து,

"நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும்.

ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள்" என்று அறிவுரை சொல்லுவார்கள்.

அப்படி கூறும் அறிவுரைதான்,

"அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?" என்பது.

அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி
பூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு
எதற்கு என்றானது.

இப்படி எத்தனையோ பழமொழிகள்
தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு,
இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்....