உடல் எடையை குறைக்க வேண்டுமா?உடல் எடையை குறைக்க வேண்டுமானால், தவிர்க்கவே முடியாத விஷயம் உடற்பயிற்சிகள்தான்

அதேசமயம், நீலநிற காய்களிலும், மஞ்சள் நிற பழங்களிலும் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.


நீலம் மற்றும் ஊதா நிற காய்கள், பழங்களில் உடல்எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.. நீலம், ஊதா கலர்களில் உள்ள காய்கறிகளில் ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

ஊதா காய்கள்: வைட்டமின் C, நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பை வெகுவாக குறைகின்றன.. அத்துடன் நோய் எதிர்ப்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, செரிமானத்துக்கும் பேருதவி செய்கிறது. அந்தவகையில், திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், போன்றவைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன..

இவைகளை டயட்டில் சேர்த்து கொண்டாலே, உடலிலுள்ள கொழுப்புகள் கரைய துவங்குமாம். மொத்தத்தில், நீலநிற பழங்கள், நீலநிற காய்களை இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிட்டு வரும்போது, உடல் எடை குறைகிறதாம்.

மஞ்சள் நிற பழம்: அதேபோல, பழங்களில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.. மஞ்சள் நிற பழங்களில் கால்சியம், வைட்டமின் C, B, A, போலிக் அமிலம் உள்ளதால், எலும்புகள், பற்களுக்கு உறுதித்தன்மையை தருகிறது..

சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் A சத்துக்கள் அபரிமிதமாக உள்ளதுடன், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க இப்பழங்கள் உதவுகின்றன.. ரத்த அழுத்தம் முதல் உடல் பருமன் வரை தடுக்கும் திறன் இந்த பழங்களுக்கு உள்ளது. இந்த காய்கறிகளுடன், சுரைக்காய், புரோக்கோலின், பீன்ஸ் குடைமிளகாயையும் சேர்த்து கொள்ளலாம்,.

சுரைக்காய்: சுரைக்காயை பொறுத்தவரை, குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால் எடை இழப்புக்கு சிறந்தது. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. சுரைக்காயுடன் சிறிது புதினா இலை, சிறிய துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கல்உப்பு சேர்த்து, வடிகட்டி குடித்தால் ஊளைச்சதை குறைய துவங்கும்.

நார்ச்சத்து நிறைந்த குடைமிளகாயில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகமாகவும், கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் போன்ற குறைவாகவும் உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற காய்களும் உடலிலுள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்க செய்கிறது.

கொண்டைக்கடலை: புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் என அத்தனையும் அடங்கியதுதான் கொண்டைக்கடலை.

1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், உடல் எடையை குறைப்பதில், இந்த பயிறுக்கு முக்கிய பங்குண்டு என்பதால் இதனை தவறவிடக்கூடாது.